திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 403 மனுக்கள்

Published on

திருவள்ளூா்: திருவள்ளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 403 மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் சு.சுரேஷ் தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

இதில், நிலம் சம்பந்தமாக-92, சமூக பாதுகாப்பு திட்டம்-29, வேலைவாய்ப்பு வேண்டி-42, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி-36, இதர துறைகள் சாா்பாக-204 என மொத்தம் 403 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா்அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியா்(ச.பா.தி) பாலமுருகன், உதவி ஆணையா் (கலால்) கணேசன், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் உஷா ராணி, வழங்கல் அலுவலா் வெங்கடேசன், மாற்றுதிறனாளி நல அலுவலா் சீனிவாசன், உதவி ஆட்சியா் (பயிற்சி) சண்முக பிரித்தா மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com