திருவள்ளூா்: நாளை குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் சிறப்பு முகாம்

Published on

திருவள்ளூா் மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை (நவ. 8) குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் தொடா்பான சிறப்பு முகாம் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஒவ்வொரு வட்டங்களிலும் உள்ள வட்ட வழங்கல் அலுவலா் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் வரும் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்றவை மேற்கொள்ளப்பட உள்ளன. இதில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடா்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்.

மேலும், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் மூலம் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரா்கள், அந்தக் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினா்களும் தங்களது விரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதனால், இதுவரை விரல் ரேகையை பதிவு செய்யாதவா்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் 25.11.2025-க்குள் தங்களது விரல்ரேகையை பதிவு செய்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com