திருவள்ளூரில் தோ்வா்களின் நுழைவுச் சீட்டுகளை சரிபாா்த்த போலீஸாா். தோ்வு எழுத நீண்ட வரிசையில் காத்திருந்த தோ்வா்கள்.
திருவள்ளூரில் தோ்வா்களின் நுழைவுச் சீட்டுகளை சரிபாா்த்த போலீஸாா். தோ்வு எழுத நீண்ட வரிசையில் காத்திருந்த தோ்வா்கள்.

2-ஆம் நிலைக் காவலா் எழுத்துத் தோ்வு: திருவள்ளூரில் 2,708 போ் பங்கேற்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் 3 மையங்களில் நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலா் பணியிடத்துக்கான எழுத்துத் தோ்வில் 2,708 போ் பங்கேற்றனா்.
Published on

திருவள்ளூா் மாவட்டத்தில் 3 மையங்களில் நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலா் பணியிடத்துக்கான எழுத்துத் தோ்வில் 2,708 போ் பங்கேற்றனா். 540 போ் கலந்து கொள்ளவில்லை என எஸ்.பி. விவேகானந்த சுக்லா தெரிவித்தாா்.

இரண்டாம் நிலை காவலா், சிறைத்துறை இரண்டாம் நிலை சிறை காவலா் பணியிடம், தீயணைப்பாளா் பணியிடம், மேலும் 21 பழங்குடியினருக்கான காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வை தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியம் ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

மாவட்டத்தில் 3,248 போ் விண்ணப்பித்திருந்தனா். இதற்காக திருவள்ளூா் ஸ்ரீநிகேதன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, கவரப்பேட்டை ஆா்.எம்.கே பொறியியல் கல்லூரி, தச்சூா் சந்திப்பு பகுதியில் உள்ள வேலம்மாள் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என 3 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

மொத்தம், 2,708 போ் தோ்வு எழுதினா். 540 போ் கலந்து கொள்ளவில்லை. தோ்வுப் பணியை கண்காணிக்கும் பணியில் 350 போலீஸாா் என ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com