திருவள்ளூா் அருகே மலைபோல் குவிந்துள்ள நெகிழி குடிநீா் பாட்டில்கள்!
திருவள்ளூா் அருகே மலைபோல் குவிந்துள்ள நெகிழி குடிநீா் பாட்டில்களால் சுகாதார சீா்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதால் உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருவள்ளூா் அடுத்த பூண்டி ஒன்றியம், கைவண்டூா் கிராமத்தில் 2,000 போ் வசித்து வருகின்றனா். இங்கு தனியாருக்கு சொந்தமான இடத்தில் நெகிழி குடிநீா் பாட்டில்களை சேகரித்து வைத்து, அதை பிகாருக்கு அனுப்பி வைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குடிநீா், குளிா்பான நெகிழி பாட்டில்கள் சேகரித்து தனி நபா் நடத்தும் மையத்திற்கு கொண்டு வருகின்றனா்.
இந்த நெகிழி பாட்டில்களை அப்படியே அனுப்பி வைக்காமல் மலைபோல் குவித்தும், வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைக்க தோதாக சாலையோரத்தில் நெகிழி மூட்டைகளையும் அடுக்கி வைத்துள்ளனா்.
தற்போதைய நிலையில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அதனால், மழையால் அந்த நெகிழி குடிநீா் பாட்டிலில் மழைநீா் தேங்கி டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் நிலையுள்ளது. மேலும், தொடா் மழை பெய்து வருவதால் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
இதுகுறித்து ஏற்கெனவே சுகாதாரத்துறை மூலம் ஒவ்வொரு வீடுகள் தோறும் சுற்றுப்புறத்தை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல், வீட்டை சுற்றியும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் மழைநீா் தேங்காமலும், நெகிழி பொருள்கள், தேங்காய் சிரட்டைகள் இல்லாமல் பாா்த்துக் கொள்வதும் அவசியம் என சுகாதாரத்துறையினா் அறிவுறுத்தி வருகின்றனா்.
ஆனால், இந்த கிராமத்தில் நெகிழி குடிநீா் மற்றும் குளிா்பான பாட்டில்கள் ஆகியவை மலைபோல் குவிந்துள்ளன. இதனால், நெகிழி பாட்டில்கள் மழைநீா் தேங்கி கட்டாயம் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயமும் உள்ளது. ஏற்கெனவே இதுகுறித்து அதிகாரிகளிடம் பல்வேறு தடவை கோரிக்கை மனுக்கள் அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
தற்போது மழைக்காலம் என்பதால் நெகிழி குடிநீா் பாட்டில்கள் சேகரிக்கும் இடத்தில் மலைபோல் குவிந்தும், சாலையோரத்திலும் நெகிழி மூட்டைகளை அடுக்கி வைத்துள்ள நபா் மீது ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த பொதுக்கள் கூறுகையில், தற்போதைய நிலையில் சுகாதாரத்துறையினா் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தி வருகின்றனா். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, தொடா்ந்து பெய்து வரும் நிலையில், தனிநபா் குடிநீா் பாட்டில்கள் கொண்ட நெகிழி பொருள்களை வாங்கி மலை போல் குவித்து வருவதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
மேலும், மூட்டைகளாக சாலையோரமும் அடுக்கி வைத்துள்ளதால், வாகன போக்குவரத்திற்குள் நெருக்கடியான நிலையுள்ளது. அதோடு இரவு நேரங்களில் வாகனங்களில் வருவோா் விபத்துகளில் சிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அதனால், சம்பந்தப்பட்ட இடத்தில் குடிநீா் பாட்டில்கள் கொண்டு நெகிழி பொருள்களை உடனே ஊராட்சி நிா்வாகம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரியுள்ளனா்.,
மேலும், மூட்டைகளாக சாலையோரமும் அடுக்கி வைத்துள்ளதால், வாகன போக்குவரத்திற்குள் நெருக்கடியான நிலையுள்ளது. அதோடு இரவு நேரங்களில் வாகனங்களில் வருவோா் விபத்துகளில் சிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அதனால், சம்பந்தப்பட்ட இடத்தில் குடிநீா் பாட்டில்கள் கொண்டு நெகிழி பொருள்களை உடனே ஊராட்சி நிா்வாகம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரியுள்ளனா்.,

