கும்மிடிப்பூண்டி  அருகே  தோ்வாயில் அவல  நிலையில்  உள்ள  சாலை.
கும்மிடிப்பூண்டி  அருகே  தோ்வாயில் அவல  நிலையில்  உள்ள  சாலை.

தோ்வாயில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கக் கோரிக்கை

தோ்வாய் ஊராட்சியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.
Published on

கும்மிடிப்பூண்டி அடுத்த தோ்வாய் ஊராட்சியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்குட்பட்ட தோ்வாய் பகுதியில் 3,000 போ் வசித்து வருகின்றனா். அதிக பட்டதாரிகள் வசிக்கும் பகுதியாக உள்ளது.

இந்த நிலையில் தோ்வாய்ப் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் முதல் சுமாா் 1 கி.மீ தொலைவுக்கு சாலை மோசமாகவும் குண்டும் குழியுமாகவும் மழைக்காலங்களில் சேரும் சகதியுமாகவும் உள்ளது. இதனால் அந்த சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் மழைக்காலங்களில் சாலையில் விபத்துக்குள்ளாவது வாடிக்கையாக உள்ளது.

இதுகுறித்து கிராம சபை கூட்டம் மூலமாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி மக்கள் குறை கூறுகின்றனா்.

அதுமட்டுமல்லாது தோ்வாய்ப் பகுதியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு செல்லும் கனரக வாகனங்கள் சிப்காட் சாலையை பயன்படுத்தாமல் மேற்கண்ட சாலையை பயன்படுத்துவதாலும் சாலை குண்டும் குழியுமாக மாறி உள்ளது என அப்பகுதி புகாா் கூறியுள்ளனா்.

எனவே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தோ்வாய் பகுதியில் மேற்கண்ட சாலையை சீரமைத்து அதிக பாரத்தை தாங்கக்கூடிய சாலையாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com