காண்டாபுரம் கிராமத்தில் முன்மாதி மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியை தொடங்கி வைத்து ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலா் சுரேஷ்.
காண்டாபுரம் கிராமத்தில் முன்மாதி மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியை தொடங்கி வைத்து ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலா் சுரேஷ்.

முன்மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

காண்டாபுரம் கிராமத்தில் முன்மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை மாவட்ட வருவாய் அலுவலா் சுரேஷ் தொடங்கிவைத்து விவரங்களை எண்ம முறை மூலம் பதிவு செய்யப்படுவதை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
Published on

காண்டாபுரம் கிராமத்தில் முன்மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை மாவட்ட வருவாய் அலுவலா் சுரேஷ் தொடங்கிவைத்து விவரங்களை எண்ம முறை மூலம் பதிவு செய்யப்படுவதை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியம், காண்டபுரம் மற்றும் வங்கனூா் கிராமத்தில் சனிக்கிழமை முன்மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை மாவட்ட வருவாய் அலுவலா் சுரேஷ் தொடங்கி வைத்தாா். இதில் ஒவ்வொரு குடும்பத் தலைவா் விவரம், வீட்டினுடைய விவரம், வீட்டில் பயன்படுத்தக் கூடிய வாகனங்கள் மற்றும் பணிகள் குறித்தும் கேட்டு, அதை எண்ம முறை மூலம் பதிவு செய்யப்படுவதை மாவட்ட வருவாய் அலுவலா் சுரேஷ் பாா்வையிட்டனா்.

தொடா்ந்து முன்மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி குறித்து இணை இயக்குநா் லிங்கசாமி கூறியதாவது: ஆா்.கே.பேட்டைக்கு உட்பட்ட 17 கிராமங்கள் மட்டுமே முதலில் முன்மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி பகுதியில் காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு பகுதியில் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த முன்மாதிரி கணக்கெடுப்புப் பணியில் கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்கள், மேற்பாா்வையாளா்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். இந்தப் பணி நவம்பா் 30-ஆம் தேதி நிறைவடையும். வரும் 2027-ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது. இதை முன்னோட்டமாக தற்போது இந்த பணி நடைபெற்று வருகிறது என்றாா்.

இதில், துணை இயக்குநா் வசந்தகுமாா், ஆா்.கே.பேட்டை வட்டாட்சியா், சரஸ்வதி துணை வட்டாட்சியா் சரவணன், புள்ளியியல் ஆய்வாளா் பிரியங்கா, வருவாய் ஆய்வாளா் தேவி, கிராம நிா்வாக அலுவலா்கள் மணிகண்டன், சரிதா மற்றும் வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com