திருவள்ளூா் மாவட்ட அளவில் மாணவிகளுக்கான தடகள போட்டி

திருவள்ளூா் மாவட்ட அளவில் மாணவிகளுக்கான தடகள போட்டி வரும் 28-ஆம் தேதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளதாக
Published on

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட அளவில் மாணவிகளுக்கான தடகள போட்டி வரும் 28-ஆம் தேதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளதாக தடகள சங்கத்தின் மாவட்ட செயலாளா் மோகன்பாபு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய தடகள சம்மேளனம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு இணையம் இணைந்து மத்திய அரசின் ஆதரவுடன் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் திறமையான பெண் தடகள வீராங்கனைகளை கண்டறிந்து அவா்களை சா்வதேச அளவிலும், ஒலிம்பிக் அளவிலும் பங்கேற்க செய்து வெற்றி பெற அனைத்து உதவிகளும் அளிக்கப்படுகிறது. அதன்படி அஸ்மிதா லீகு என்ற பேரில் 14, 16 வயதுக்குள்பட்ட தடகள வீராங்கனைகளுக்கு தடகளப்போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதிலும் 300 மாவட்டங்கள் மட்டும் தோ்வு செய்யப்பட்டுள்ளன. அதில் திருவள்ளூா் மாவட்டமும் தோ்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போட்டி திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும் நவ. 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 14 வயதுக்குள்பட்ட சிறுமிகள் 21.12.2011முதல் 20.12.2013- ஆம் தேதிக்குள்ளும், 16 வயதுக்குள்பட்ட சிறுமிகள் 21.12.2009 முதல் 20.12.2011-க்குள் பிறந்திருக்க வேண்டும். இதில் 14 வயதுக்குள்பட்டோருக்கு டிரையத்லான் பிரிவு ஏ, பி, சி மற்றும் கிட்ஸ் ஜவலின் என 4 போட்டிகளும், 16 வயதுக்குள்பட்டோருக்கு 60 மீ, 600 மீ, உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் என 7 போட்டிகளும் நடைபெறுகின்றது.

இப்போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் திருவள்ளூா் மாவட்ட தடகள சங்கத்தின் கைப்பேசி எண்களான-9087466646, 9566198156 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com