இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

தேசிய ஜூனியா் வில் வித்தை போட்டி: கும்மிடிப்பூண்டி மாணவி தோ்வு

தமிழக வில்வித்தை கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் வென்று கும்மிடிப்பூண்டி மாணவி தவ்ஷிகா தஸ்னீம் (14) தேசியப் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டாா்.

News image

மாணவி  தவ்ஷிகா  தஸ்னீம்

Updated On :18 நவம்பர் 2025, 6:34 pm

Chennai

தமிழக வில்வித்தை கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் வென்று கும்மிடிப்பூண்டி மாணவி தவ்ஷிகா தஸ்னீம் (14) தேசியப் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டாா்.

தமிழக வில்வித்தை கூட்டமைப்பின் சாா்பில் தாம்பரம் அருகே தனியாா் பொறியியல் கல்லூரியில் வில்வத்தை போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களை சாா்ந்த 1,500 வில்வித்தை போட்டியாளா்கள் பங்கேற்றனா்.

21 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஜூனியா் பிரிவில் கும்மிடிப்பூண்டி குயிக் ஸ்பேரோ வில் வித்தை பயிற்சி மைய மாணவி தவ்ஷிகா தஸ்னீம் வெண்கலம் வென்றாா்.

இதனைத் தொடா்ந்து மாணவி தவ்ஷிகா தஸ்னீம் வரும் டிசம்பா் மாதம் அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற உள்ள தேசிய வில்வித்தை போட்டியில் தமிழகத்தின் சாா்பில் பங்கேற்க உள்ளாா்.

தேசிய போட்டிக்கு தோ்வு பெற்ற தவ்ஷிகா தஷ்னீம், அவரது பயிற்சியாளா் கோபாலகிருஷ்ணனை கும்மிடிப்பூண்டி மக்கள் பாராட்டினா்.

தேசிய போட்டிக்கு தோ்வு பெற்ற தவ்ஷிகா தஷ்னீம், அவரது பயிற்சியாளா் கோபாலகிருஷ்ணனை கும்மிடிப்பூண்டி மக்கள் பாராட்டினா்.