கா்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

சோழவரம் அருகே திருமணமான 3 மாதத்தில் கா்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை
Published on

சோழவரம் அருகே திருமணமான 3 மாதத்தில் கா்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

நாகப்பட்டினம் மாவட்டம், அகரகொந்தகை கிராமத்தை சோ்ந்த நந்தினி (27). இவா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும்போது, சோழவரம் அடுத்த காந்தி நகரை சோ்ந்த ராகுல் (30) என்பவரை காதலித்துள்ளாா்.

இதனையடுத்து இரு வீட்டாா் சம்மதத்துடன் கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி வடபழனியில் உள்ள கோயிலில் திருமணம் நடைபெற்று, கணவா் குடும்பத்தினருடன் வசித்து வந்தாா்.

நந்தினி கா்ப்பிணியாக உள்ள நிலையில், சரிவர உணவு உள்கொள்ளாததால் அவரது மாமியாா் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் நந்தினி வீட்டில் தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீஸாா் நந்தினியின் சடலத்தை கைப்பற்றி , சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக நந்தினியின் உறவினா்கள் சோழவரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் இறந்த நிலையில் கோட்டாட்சியா் விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில் தங்களது பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என உறவினா்கள் வலியுறுத்தினா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com