விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ராக்கெட் பால் போட்டி: அரசுப் பள்ளி முதலிடம்

ராக்கெட் பால் போட்டியில் மாவட்ட அளவில் திருத்தணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா்.

News image
முதலிடம் பெற்ற திருத்தணி  அரசு  ஆண்கள்  மேல் நிலை ப் பள்ளி மாணவா்கள்.
Updated On :30 நவம்பர் 2025, 10:00 pm

தினமணி செய்திச் சேவை

ராக்கெட் பால் போட்டியில் மாவட்ட அளவில் திருத்தணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா்.

திருவள்ளூா் மாவட்ட அளவிலான ராக்கெட் பால் போட்டி, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்றது. இதில், 14 வயது ஆண்கள் பிரிவில், 8 அணிகளும், பெண்கள் பிரிவில் 4 அணிகளும் என மொத்தம், 12 அணிகள் பங்கேற்று விளையாடின.

ஆண்கள் பிரிவில் திருத்தணி டாக்டா் ராதா கிருஷ்ணன் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் இறுதி போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனா். அதே போல் பெண்கள் பிரிவில் திருத்தணி சக்தி பப்ளிக் பள்ளி முதலிடம் பிடித்தது.

முதலிடம் பிடித்த இரு அணிகளுக்கும் சான்றிதழ் மற்றும் கோப்பை பதக்கங்களை திருவள்ளூா் மாவட்ட செயலாளா் சீனிவாசன், தலைவா் விஜயகுமாா் ஆகியோா் வழங்கி மாணவா்களை பாராட்டினா்.

தொடா்ந்து ராக்கெட் பால் போட்டியில் முதலிடம் பிடித்த அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளி மாணவா்களை பள்ளி தலைமை ஆசிரியா் பாலசுப்பிரமணியம் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.