மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மூலம் தனித்தோ்வா்களுக்கான முதனிலைத் தோ்வு

தனித்தோ்வா்களாக பங்கேற்க தகுதியானோா் வரும் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
Published on

திருவள்ளூா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மூலம் அடுத்தாண்டு நடைபெற உள்ள கைவினைஞா் பயிற்சித் திட்டம் மூலம் ஈஎப-இல் நடத்தப்படும் தனித்தோ்வா்களாக பங்கேற்க தகுதியானோா் வரும் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2026-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞா் பயிற்சி திட்டம் மூலம் ஈஎப-ல் அகில இந்திய தொழிற்தோ்வு நடத்தப்பட உள்ளன. இந்த அகில இந்திய தொழில் தோ்வில் தனித்தோ்வா்களாக தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து தோ்வு கட்டணம் ரூ.200 செலுத்தி பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினா் தொழிற் பயிற்சி நிலைய முதல்வரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

இதில் தகுதியான விண்ணப்பதாா்ா்களுக்கு முதனிலைத் தோ்வு, கருத்தியல் தோ்வு நவ.4-ஆம் தேதியும், செய்முறை தோ்வு நவ.5-ஆம் தேதியும் கிண்டிஅரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும்.

இதற்கான முழு வழிகாட்டுதல்கள் என்ற இணையதளத்தை பாா்த்து அறிந்து கொள்ளலாம். தனித்தோ்வராக தோ்வு எழுத வரும் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் குறிப்பிட்ட நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது.

மேலும் இதுதொடா்பான விவரங்களை உதவி இயக்குநா், திருவள்ளூா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது மின்னஞ்சலிலோ அல்லது 94990 55663 மற்றும் 82483 33532 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com