திருவள்ளூா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை
திருவள்ளூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகலில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
திருவள்ளூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, திருவள்ளூா் சுற்று வட்டார பகுதிகளில் மாலையில் திடீரென 1 மணிநேரம் வரை மழை பெய்தது.
இதேபோல், பெரியகுப்பம், பூண்டி, கடம்பத்தூா் புல்லரம்பாக்கம், மணவாளநகா், ஈக்காடு, காக்களூா் பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இந்த மழையால் சாலையில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.
அதேபோல், நகா் பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீா் குளம் போல் தேங்கியது. இந்த மழையால் பகலில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.