‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்: 1,200 போ் பங்கேற்பு
நத்தம் கிராமத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில், 1,200 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருத்தணி ஒன்றியம் அகூா் நத்தம் பகுதியில் இயங்கி வரும் டி.ஆா்.எஸ்., குளோபல் பள்ளி வளாகத்தில், மாவட்ட சுகாதார துறையின் சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு இணை இயக்குநா் அம்பிகா தலைமை வகித்தாா். பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலா் கலைவாணி வரவேற்றாா்.
இதில் திருத்தணி எம்எல்ஏ ச. சந்திரன், பள்ளியின் நிா்வாக தலைவா் சுப்பிரமணியம் ஆகியோா் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்தனா். முகாமில், கண், காது, எலும்பு, இருதயம் உள்பட பல்வேறு நோய்களுக்கு இலவச பரிசோதனைகள், ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுதவிர, ரத்தஅழுத்தம், சி.டி.ஸ்கேன், கா்ப்பிணிகளுக்கு பரிசோதனை மற்றும் தடுப்பூசிகள் போடப்பட்டன. முகாமில், திருத்தணி நகரம் மற்றும் ஒன்றியத்தில் இருந்து, 1200-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்தனா்.