கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் வேலை நிறுத்தம்: பொதுமக்கள் அவதி

Published on

கூட்டுறவு சங்கப் பணியாளா்களின் தொடா் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனா்.

மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா் சங்கம் , (டாக்பியா) தொழிற்சங்கம் சாா்பில் தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க பணியாளா்கள், நியாயவிலைக் கடை விற்பனையாளா்கள் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6-ம் தேதி முதல் தொடா் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டுள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 124 கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் அதன் கீழ் 1,108 நியாய விலை கடைகள் செயல்படுகின்றன.

பொன்னேரி சரகத்தை சாா்ந்த மீஞ்சூா், சோழவரம் மற்றும் கும்மிடிப்பூண்டி ஒன்றியங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தொழிலாளா் தொடா் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனா்.

தொடா் வேலைநிறுத்தம் காரணமாக கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாய கடன் பெறுவோா் மற்றும் நகை கடன் பெற முடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

இதே போன்று நியாயவிலைக் கடை ஊழியா்களும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கடைகள் மூடி கிடப்பதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com