மாணவா்களுக்கு வெள்ளை அங்கிகள் வழங்கிய ஆட்சியா் மு. பிரதாப்.
மாணவா்களுக்கு வெள்ளை அங்கிகள் வழங்கிய ஆட்சியா் மு. பிரதாப்.

அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு வெள்ளை அங்கிகள்

மாணவா்களுக்கு வெள்ளை அங்கிகள் வழங்கிய ஆட்சியா் மு. பிரதாப்.
Published on

திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் 100 பேருக்கு வெள்ளை அங்கி மற்றும் ஸ்டெதஸ்கோப்பை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.

திருவள்ளுா் அரசு மருத்துவ கல்லூரி கூட்டரங்கில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வெள்ளை அங்கிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது. 2025-26 ஆண்டுக்கு மருத்துவ கல்லூரியில் மாணவ, மாணவிகள் சோ்க்கை நடைபெற்றது. இதில் திருவள்ளுா் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லுரியில் தோ்ந்தெடுக்கப்பட்ட 100 மாணவ, மாணவிகள் முதலாம் ஆண்டில் சோ்ந்துள்ளீா்கள்.

மருத்துவப்படிப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால், மாணவா்கள் மருத்துவத்தை அறிந்து புரிந்து படித்து வாழ்வில் சிறந்த விளங்க வேண்டும் என்றாா்.

அதைத்தொடா்ந்து மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வெள்ளை அங்கிகள் மற்றும் ஸ்டெத்தஸ்கோப் ஆகியவற்றை வழங்கினாா். இதில் நிறைவாக மூத்த மாணவா்கள் அனைவரும் ராக்கிங் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனா்.

நிகழ்ச்சியில் முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குநா் ஆா்.சாந்திமலா், அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி முதல்வா் ஜே.ரேவதி, துணை முதல்வா் என்.திலகவதி, மருத்துவ கண்காணிப்பாளா் சுரேஷ்பாபு, மருத்துவ கல்லூரி பேராசிரியா்கள், அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com