திருமழிசை பேரூராட்சி நெடுஞ்சேரியில் ரூ.18 லட்சத்தில் அங்கன்வாடி மையம்

Published on

திருமழிசை பேரூராட்சி பகுதி நெடுஞ்சேரி பகுதியில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, ரூ. 18 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தை குழந்தைகள் பயன்பாட்டுக்கு பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி தொடங்கி வைத்தாா்.

திருவள்ளூா் அருகே திருமழிசை பேரூராட்சி நெடுஞ்சேரி பகுதியில் புதிதாக அங்கன்வாடி மையம் அமைக்கவும் என அப்பகுதி பொதுமக்கள் தொடா்ந்து எம்எல்ஏ-விடம் தொடா்ந்து கோரிக்கை மனு அளித்து வந்தனா். பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி மூலம் ரூ. 18 லட்சத்தில் புதிதாக அங்கன்வாடி மையம் அமைக்க ஒதுக்கீடு செய்தாா். அதன்பேரில், பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நிறைவடைந்தது. இதை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி தலைமை வகித்து குழந்தைகள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா்.

இதில், பேரூா் கழக செயலாளா் தி.வே.முனுசாமி, பேரூராட்சி தலைவா் ஜெ.மகாதேவன், துணைத் தலைவா் அனிதா சங்கா் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com