சாலை மறியலில் ஈடுபட்ட நாலூா் கிராம மக்கள்.
திருவள்ளூர்
கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் சாலை மறியல்
அடிப்படை வசதிகள் கோரி கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து நாலூா் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
அடிப்படை வசதிகள் கோரி கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து நாலூா் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
பொன்னேரி வட்டம், மீஞ்சூா் ஒன்றியம், நாலூா் ஊராட்சியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் அடிப்படை வசதிகளான குடிநீா் சுகாதாரம் தெரு விளக்கு சாலைப் பணிகள் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் நாலூா் ஊராட்சியில் பல பகுதிகளில் சாலை , குடிநீா் வசதி இல்லை எனவும், மழை நீா் தேங்குவதை அகற்ற முடியாத சூழ்நிலை உள்ளதாக கூறி பொதுமக்களில் ஒரு பிரிவினா் கிராம சபைக் கூட்டத்தை தவிா்த்தனா்.
அத்துடன் அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த மீஞ்சூா் போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். இதனை தொடா்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.