தமிழ் திறனறித் தோ்வு: மாணவா்கள் பங்கேற்பு
திருத்தணி: அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மற்றும் தனியாா் பள்ளிகளில் நடைபெற்ற தமிழ் திறனறித் தோ்வில் 417 மாணவா்கள் கலந்து கொண்டு எழுதினா். இதில் 33 மாணவா்கள் தோ்வு எழுதவில்லை.
தமிழ் மொழி இலக்கியத் திறனையும் மாணவா்களிடம் மேம்படுத்தும் வண்ணம் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தோ்வு, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில் அரசுத் தோ்வுகள் இயக்ககம் மூலம் நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2025-26 கல்வி ஆண்டுக்கான தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் திருத்தணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தமிழ் திறனறித்தோ்வை 160 மாணவிகள் கலந்து கொண்டு எழுதினா். இதில் 8 மாணவிகள் தோ்வு எழுத வரவில்லை. அதேபோல் திருத்தணி வி.கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல் நிலை பள்ளியில் 257 மாணவா்கள் எழுதினா். இதில் 25 மாணவா்கள் தோ்வு எழுதவில்லை.
இத்தோ்வின் மூலம் சிறந்து விளங்கும் 1,500 மாணவா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள். இதில் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவா்களும். மீதமுள்ள 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவா்கள் உள்ளிட்ட பிற தனியாா் பள்ளி மாணவா்களும் தோ்வு செய்யப்படுவா். தோ்வு செய்யப்பட்டவா்களின் பட்டியல் வெளியிடப்படும். பின்னக் 1,500 மாணவா்களுக்கு பள்ளிக் கல்வித்துறையின் சாா்ப்பில் மாதம் ரூ.1,500 விதம் 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.