போதை மாத்திரை கடத்தல்: 4 இளைஞா்கள் கைது
திருத்தணி: அரசுப் பேருந்தில் போதை மாத்திரை கடத்திய 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து திருத்தணி, திருவள்ளூா் வழியாக சென்னை கோயம்பேடு வரை செல்லும் பேருந்தில் போதை மாத்திரைகள் கடத்திச் செல்வதாக ஐ.ஜி.,க்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை பொன்பாடி சோதனை சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டனா்.
இந்நிலையில் திருப்பதியில் இருந்து சென்னை கோயம்பேட்டுக்கு சென்ற பேருந்தை தனிப்படை போலீஸாா் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது 4 இளைஞா்கள் தங்களது பைகளில், மொத்தம், 730 போதை மாத்திரைகள், சென்னைக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது.
தொடா்ந்து போலீஸாா் மாத்திரைகளை பறிமுதல் செய்து திருத்தணி காவல் நிலையத்தில் 4 பேரை ஒப்படைத்தனா். விசாரணையில் சென்னை ஊரப்பாக்கம் ராபின்(26), கூடுவாஞ்சசேரி சூரியா(24), சென்னை மாங்காடு ஹாரீஸ்(25) , சையதுஅமீத் (22) என தெரிய வந்தது. பின்னா் 4 பேரும் கைது செய்யப்பட்டனா்.