திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.43 கோடி

Published on

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 31 நாள்களில் ரூ. 1 கோடியே 43 லட்சத்து 74ஆயிரத்து 754 ரொக்கம் மற்றும் 214 கிராம் தங்கம், 10.428 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு அண்டை மாநிலங்களான ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து முருகப் பெருமானை வழிபட்டுச் செல்கின்றனா்.

இதில், பக்தா்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உண்டியலில் பணம், நகை, வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனா். இந்த நிலையில், பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய ரொக்கம் எண்ணும் பணி வியாழக்கிழமை தேவா் மண்டபத்தில் நடைபெற்றது. முருகன் கோயில் இணை ஆணையா் ரமணி, அறங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, மு.நாகன், மோகனன், உஷா ரவி ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

திருக்கோயில் பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள், ஓய்வுபெற்ற அலுவலா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு, உண்டியல் காணிக்கைகளை எண்ணினா். இதில், கடந்த 31 நாள்களில் ரூ. 1 கோடியே 43 லட்சத்து 74ஆயிரத்து 754 ரொக்கம் மற்றும் 214 கிராம் தங்கம், 10.428 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com