அரசுப் பள்ளி மாணவா்கள் 100 பேருக்கு மிதிவண்டிகள்
திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் 100 பேருக்கு ரோட்டரி கிளப் ஆப் சென்னை நந்தனம் சாா்பில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
பூண்டி ஊராட்சி பிளேஸ்பாளையத்தில், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை நந்தவனம் மற்றும் ரோட்டரி மாவட்டம் 3234-இல் உள்ள பல ரோட்டரி கிளப்புகள் இணைந்து நடத்திய ‘சைக்கிள் விநியோக திட்டம் - கட்டம் 1‘ நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வுக்கு ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை நந்தவனத்தின் தலைவா் நபின் பிரசாத் யாதவ் தலைமை வகித்தாா். இதில் செயலாளா் ரியன் டில்லிபாபு, பொருளாளா் வாசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக என். எஸ். சரவணன் பங்கேற்று,பிளேஸ்பாளையம் மற்றும் அழிக்குழி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு மொத்தம் 100 மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
இதன் மூலம் மாணவா்கள் தங்கள் கல்வி நிலையங்களுக்கு எளிதில் சென்றடைவதற்கும், கல்வி மற்றும் வாய்ப்புகளுக்கு நெருக்கமாக வருவதற்கும் வழிவகை செய்வதாகவும் அமைகிறது.
இந்நிகழ்ச்சி, ரோட்டரி கிளப் ஆஃப் நந்தனம் சென்னையின் கல்வி, சுயநிறைவு மற்றும் சமூக மேம்பாடு) என்ற முக்கிய நோக்கங்களை வலியுறுத்தும் வகையில் வழங்கப்பட்டன.