ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை
திருவள்ளூா்: திருவள்ளூரில் காலில் அடிபட்டதால் ஆட்டோ ஓட்ட முடியாமல் விரக்தி அடைந்த ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருவள்ளூா் செக்கடி தெருவைச் சோ்ந்த ரவி (51). இவா் சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வந்தாராம். இந்த நிலையில் சில நாள்களுக்கு முன்பு காலில் அடிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாராம். இதற்கிடையே இனிமேல் ஆட்டோ ஓட்ட முடியாதே என விரக்தி அடைந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு கொண்டாராம்.
இதைப்பாா்த்த அவரது மனைவி அலமேலு மற்றும் உறவினா்கள் மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் திருவள்ளூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து மேற்கொண்டு வருகின்றனா்.