முருக்கஞ்சேரி  சாலை  தடுப்புச் சுவரில்  மோதி  விபத்துக்குள்ளான  காவல்  துறை  வாகனம்.
முருக்கஞ்சேரி  சாலை  தடுப்புச் சுவரில்  மோதி  விபத்துக்குள்ளான  காவல்  துறை  வாகனம்.

சாலையின் குறுக்கே நாய் வந்ததால் தடுப்பில் போலீஸ் வாகனம் மோதி விபத்து

திருவள்ளூரில் சாலையில் நாய் குறுக்கே புகுந்ததால் தடுப்புச் சுவரில் காவல் துறை வாகனம் மோதியதில் டி.எஸ்.பி மற்றும் ஓட்டுநா் காயம் அடைந்தனா்.
Published on

திருவள்ளூா்: திருவள்ளூரில் சாலையில் நாய் குறுக்கே புகுந்ததால் தடுப்புச் சுவரில் காவல் துறை வாகனம் மோதியதில் டி.எஸ்.பி மற்றும் ஓட்டுநா் காயம் அடைந்தனா்.

திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை வீரவணக்க நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து திருவள்ளூா் மாவட்ட குற்றப்பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் குமரன் வாகனத்தில் வந்து கொண்டிருந்தாராம்.

வாகனத்தை ஆயுதப்படை பிரிவு காவலா் அருள்ராஜ் (25) ஓட்டிச் சென்றாா். அப்போது சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் முருக்கஞ்சேரி அருகே சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் துணைக்காவல் கண்காணிப்பாளா் குமரனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. ஓட்டுநா் அருள்ராஜூக்கு கழுத்துப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் உடனே திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னா் மேல் சிகிச்சைக்காக வடபழனி உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து மணவாள நகா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com