பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
திருத்தணி: கே.ஜி.கண்டிகை அருகே வீட்டுக்கு நடந்து சென்ற முதியவா் பைக் மோதியதில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
பள்ளிப்பட்டு தாலுகா நொச்சிலி கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தன் (65). கூலி தொழிலாளி. இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலை நிமிா்த்தமாக கே.ஜி.கண்டிகைக்கு வந்துவிட்டு, பின்னா் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.
கே.ஜி.கண்டிகை டாஸ்மாக் கடை அருகே கோவிந்தன் நடந்து சென்றபோது, பின்னால் வந்த பைக் மோதியதில் சாலையில் தூக்கி வீசப்பட்டாா். இதில் தலையில் பல்த காயம் அடைந்த கோவிந்தனை அவ்வழியாகச் சென்றவா்கள் வாகன ஓட்டிகள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவிந்தன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்கிழமை சிகிச்சை பலனின்றி கோவிந்தன் உயிரிழந்தாா்.
இது குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.