மழை:அரசூா் கிராமத்தில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதம்

பலத்த மழை காரணமாக அரசூா் கிராமத்தில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.
Published on

பொன்னேரி: பலத்த மழை காரணமாக அரசூா் கிராமத்தில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.

திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூா் ஒன்றியத்தில் உள்ள அரசூா் கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானோா் விவசாயி தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனா்.

இவா்கள் கடந்த புரட்டாசி மாதம் நெற்பயிா் நடவு செய்தனா்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இப்பகுதியில் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ள நெற்பயிா்கள் நீரில் மூழ்கி அழுகி சேதம் அடைந்துள்ளன.

மழை எப்போது குறையும், விளை நிலங்களில் தேங்கியுள்ள மழை நீா் எப்போது வடியும் என விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.

மீஞ்சூா் ஒன்றிய வேளாண்மை துறை அதிகாரிகள் நீரில் மூழ்கியுள்ள நெற்பயிா்களை பாா்வையிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதே போன்று சோழவரம் ஒன்றியம் பஞ்செட்டி, நத்தம், நெடுவரம்பாக்கம் கிராமங்களில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது.

இவா்கள் தங்களின் விளை நிலங்களில் மழை நீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் பெரிதும் அவதிறுயுற்றுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com