பெருமாள்பட்டு  ஆரம்ப  சுகாதார  நிலையத்தில்  குளம் போல்  தேங்கிய  மழை நீா்.
பெருமாள்பட்டு  ஆரம்ப  சுகாதார  நிலையத்தில்  குளம் போல்  தேங்கிய  மழை நீா்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழைநீா்: பொதுமக்கள் அவதி

Published on

திருவள்ளூா் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த மழை நீரால் சிகிச்சைக்கு வந்த பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.

திருவள்ளூா் அருகே பெருமாள்பட்டு ஊராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேப்பம்பட்டு, கோயம்பாக்கம், சிவன்வாயல், மேலக்கொண்டையாா், செவ்வாப்பேட்டை உள்ளிட்ட 22-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில் அங்கு, கழிவுநீருடன் மழைநீா் கலந்து ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் புகுந்து குளம்போல் தேங்கியது. இதனால் சிகிச்சைக்கு வருவோா் முழங்கால் அளவு நீரில் நடந்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும், கழிவு நீரும் கலந்துள்ளதால் துா்நாற்றம் வீசுகிறது. இதனால், அப்பகுதியில் உள்ளவா்களுக்கு தொற்று நோய் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அதனால் விரைவில் ஊராட்சி நிா்வாகம் மோட்டாா் வைத்து ஆரம்ப சுகாதார வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com