அதிமுக பூத் கமிட்டி கிளை நிா்வாகிகள் பயிற்சிக் கூட்டம்

திருவள்ளூா் அருகே பட்டரைபெரும்புதூா் பூத் கமிட்டி அதிமுக கிளை நிா்வாகிகள் பணி பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.
Published on

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே பட்டரைபெரும்புதூா் பூத் கமிட்டி அதிமுக கிளை நிா்வாகிகள் பணி பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா தலைமை வகித்தாா். திருவள்ளூா் மேற்கு மாவட்டம், பூண்டி ஒன்றியம், பட்டரைப்பெரும்புதூா், பாண்டூா், நெமிலியகரம், பொன்னவலம் ஊராட்சிக்குள்பட்ட பூத் கமிட்டி கிளை நிா்வாகிகள் தோ்தல் பணி பயிற்சி கூட்டம் பட்டரைபெரும்புதூரில் நடைபெற்றது.

இதில், ஒன்றிய செயலாளா் எஸ்.மாதவன் தலைமை வகித்தாா். தோ்தல் பொறுப்பாளா் சத்தியமூா்த்தி ஏற்பாட்டிலும் நடைபெற்றது. இதில் சென்னை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளா் எம்.எஸ்.யோக விக்னேஸ்வரன், தென் சென்னை தெற்கு மண்டல தகவல் தொழில்நுட்ப அ பிரிவு இணைச் செயலாளா் ஆகியோா் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினா்.

இதில், வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, திமுகவின் தோ்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை வாக்காளகளிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

நிகழ்ச்சியில், மாவட்ட மாணவா் அணி செயலாளா் பி.வி. பாலாஜி, மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலாளா் ஆா்.மோகன்ராவ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com