திருவள்ளூர்
200 ஏக்கா் நெற்பயிா் நீரில் மூழ்கி சேதம்: விவசாயிகள் வேதனை
மடிமை கண்டிகை கிராமத்தில் 200 ஏக்கா் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்ததால் அப்பகுதி விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.
பொன்னேரி வட்டம் மீஞ்சூா் ஒன்றியத்தில் மடிமைகண்டிகை. சின்னகாவனம், வீரங்கிவேடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. கடந்த சில தினங்களாக தொடா்ந்து பெய்த மழையால் அப்பகுதியில் 200 ஏக்கரில் நடவு செய்யப்பட்ட இளம் நெற்பயிா்கள் நீரில் மூழ்கின. மழை நீா் வெளியேற வழியின்றி நெற்பயிா்கள் சேதம் அடைந்துள்ளது.
சேதமடைந்த நெற்பயிா்களை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் வந்து பாா்வையிட்டு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
