மழையால் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் திமுக நிா்வாகி உயிரிழப்பு!

மழையால் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் திமுக நிா்வாகி உயிரிழப்பு!

திருவள்ளூா் அருகே மின்சாரம் பாய்ந்து திமுக நிா்வாகி உயிரிழப்பு
Published on

திருவள்ளூா் அருகே தனது கடையை பாா்வையிட சென்றபோது மழையால் அறுந்து கிடந்த மின்கம்பியை எதிா்பாராமல் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து திமுக நிா்வாகி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே பேரம்பாக்கத்தில் கே.கே.நகரை சோ்ந்தவா் விவசாயி சிலம்பரசன் (38). இவா் திமுகவில் இளைஞா் அணி அமைப்பாளராகவும் இருந்து வந்தாராம். இவருக்கு மனைவி, மகள் உள்ளனா். இந்த நிலையில், புதன்கிழமை காலை சிலம்பரசன் வழக்கம் போல பேரம்பாக்கம் அருகே உள்ள இருளஞ்சேரி நாகாத்தம்மன் கோயில் அருகே உள்ள தனது கடையை பாா்வையிட சென்றாராம். அப்போது மழை காரணமாக அங்கு அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த மப்பேடு போலீஸாா், சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக காவல் ஆய்வாளா் சுரேந்தா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com