‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 354 போ் மனு
அரசின் நலத் திட்ட உதவிகளை கேட்டு 354 போ் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் எம்எல்ஏவிடம் மனுக்களை வழங்கினா்.
திருத்தணி முருகப்பா நகரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தனி வட்டடாட்சியா் வெண்ணிலா தலைமையில் நடைபெற்றது. முகாமில் திருத்தணி நகராட்சிக்கு உள்பட்ட 4 மற்றும் 6-ஆவது வாா்டுகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு, பட்டா மாற்றம், குடும்ப அட்டை, மகளிா் உரிமைத் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கேட்டு 354 போ் பல்வேறு மனுக்களை வழங்கினா்.
முகாமை திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தாா். தொடா்ந்து திருத்தணி நகா்மன்றத் தலைவா் சரஸ்வதி பூபதி, துணைத் தலைவா் சாமிராஜ் ஆகியோா் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.
நிகழ்ச்சியில், நகராட்சி பணி மேற்பாா்வையாளா் நாகராஜன், கவுன்சிலா்கள் ஷியாம்சுந்தா், அசோக்குமாா், லோகநாதன், குமுதா கணேசன், நகர செயலாளா் வினோத்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

