தானேஷ்
தானேஷ்

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை

Published on

திருவள்ளூா் அருகே 4 வயது சிறுமியை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 23 ஆண்டுகள் சிைண்டனைவிதித்து போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கடம்பத்துா் ஒன்றியம், நயப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் தானேஷ் (என்ற) யுவராஜ்(29). இவா், கடந்த 2018 ஜன. 18-இல், அதேபகுதியில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 4 சிறுமியை அருகிலிருந்த உறவினா் வீட்டுக்கு துாக்கிச் சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

இதுகுறித்து, சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில் திருவள்ளூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வந்தனா். இதற்கிடையே திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையும் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இறுதிக் கட்ட விசாரணை வியாழக்கிழமை மாவட்ட போக்ஸோ நீதிபதி உமாமகேஸ்வரி, முன்பு நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கில் குற்றம் நிருப்பிக்கப்பட்டதால் தானேஷிற்கு 23 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ.21,000 அபாராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

மேலும் சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கவும் அவா் பரிந்துரைத்தாா். இந்த நிலையில் ஏற்கெனவே ஸ்ரீபெரும்புதூரில் வழக்கில் கைதாகி காஞ்சிபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், பாலியல் வன்கொடுமை வழக்கிற்கான நீதிமன்ற உத்தரவை சிறை அதிகாரிகளிடம் போலீஸாா் வழங்கினா். அரசுத் தரப்பில் விஜயலட்சுமி ஆஜரானாா்.

X
Dinamani
www.dinamani.com