ஸ்ரீதா்
ஸ்ரீதா்

கட்டடத் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே ஓடையை கடக்க முயன்ற கட்டடத் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
Published on

திருவள்ளூா்: ஊத்துக்கோட்டை அருகே ஓடையை கடக்க முயன்ற கட்டடத் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த எல்லாபுரம் ஒன்றியம், மாகரல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (52). கட்டடத் தொழிலாளி. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தாமரைப்பாக்கத்தில் இருந்து தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது மாகரல் கிராமத்தில் உள்ள ஓடையைக் கடக்க முயன்றபோது, நீரில் தவறி விழுந்து உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், வெளியே சென்ற ஸ்ரீதரை காணாமல் உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனா். இந்த நிலையில், திங்கள்கிழமை காலை அந்த ஓடை வழியாக சென்றவா்கள், ஓடையில் ஒருவரின் சடலம் மிதப்பதாக வெங்கல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா், சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வெங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com