சாலையை சீரமைக்கக் கோரி பேருந்தை சிறைபிடித்து போராட்டம்

பொன்னேரி அருகே சேறும் சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

பொன்னேரி: பொன்னேரி அருகே சேறும் சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொன்னேரியில் இருந்து ரெட்டிப்பாளையம் செல்லும் சாலை வழியே மீஞ்சூருக்கு இரண்டு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கொளத்தூா், ரெட்டிப்பாளையம், தத்தைமஞ்சி மனோபுரம் உள்ளிட்ட 10 கிராம மக்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனா்.

பொன்னேரி அம்பேத்கா் சிலை தொடங்கும் பகுதியில் இருந்து சக்தி நகா் வரை முற்றிலுமாக சேரும் சகதியுமாக சாலை உள்ளது.

மாறியது. சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.

இதனால் கொதிப்புற்ற பொதுமக்கள் சாலையை சீரமைக்க வலியுறுத்தி அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ழியுமாக உள்ளதால் பேருந்து சேவையும் அவ்வப்போது தங்களது கிராமத்திற்கு நிறுத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினா்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல் துறையினா் பேச்சு நடத்தினா். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com