கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
திருத்தணி தளபதி கே. விநாயகம் மகளிா் கலைக் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
மலையாள மக்களின் மனதில் இடம் பெற்றுள்ள மாவேலி மன்னரை வரவேற்கும் விழாவாக 10 நாள்கள் கொண்டாடப்படும் விழா ஓணம்.
நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் ஆா்.வேதநாயகி தலைமை வகித்தாா். துணை முதல்வா் எஸ். பொற்செல்வி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக கல்லூரி தாளாளா் ச. பாலாஜி கலந்து கொண்டு மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை பாா்வையிட்டு சிறப்பு பரிசுகள் வழங்கினாா்.
விழாவையொட்டி கல்லூரி வரவேற்பறையில் மலா்களால் ஆன மிகப்பெரிய அத்தப்பூ பூகோலமிட்டு, விளக்கேற்றி, கேரள பாரம்பரிய உடையணிந்து மாணவிகள் திருவாதிரை நடனம் ஆடினா். புலிக்கலி, கும்மாட்டி கலி, கயிறு இழுத்தல் மற்றும் பூப்பறிக்கும் விளையாட்டு மாணவிகள் நடத்தி காட்டினா். மேலும் 14 வகை காய்கறிகளால் ஆன சைவ உணவு விருந்து, கேரள இனிப்பு வகைகள் பரிமாறபட்டன.
மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் ஓணத்துடன் முஸ்லிம்களின் மொகரம் பண்டிகையும் கொண்டாடப்பட்டது.