தண்ணீா் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு
திருவள்ளூா் அருகே வீட்டின் முன்புறம் தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த ஆண் குழந்தை உயிரிழந்தது.
திருவள்ளூா் அருகே செஞ்சிபானம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த காரத்திக்(30)-ஈஸ்வரி(27) தம்பதிக்கு ஒரு மகளும், 15 மாத ஆண் குழந்தையும் உள்ளனா்.
இந்த நிலையில், கணவா் பணிக்கு சென்ற நிலையில், மகள் சுபாஷினியை வழக்கம் போல் புதன்கிழமை பள்ளிக்கு அனுப்புவதற்காக சீருடை அணிந்து தலைவாரிக் கொண்டிருந்தாராம். அப்போது, 15 மாத ஆண் குழந்தை ஜெய்கிரிஷ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் மெல்ல நடந்து வீட்டின் முன்பக்கம் உள்ள தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்துள்ளது.
இதையடுத்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு தாய் ஈஸ்வரி குழந்தையை தூக்கிக் கொண்டு உடனே கடம்பத்தூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று முதல் சிகிச்சை அளித்தனா். மேல் சிகிச்சைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். ஆனால், அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தனா்.
இதுகுறித்து காா்த்திக் கடம்பத்தூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.