புரட்சி பாரதம் கட்சி வீரவணக்க நாள் கூட்டம்
புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனா் பூவை மூா்த்தியின் நினைவு நாளை ஒட்டி வீர வணக்க நாள் கூட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது(படம்).
கூட்டத்துக்கு புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூா் மாவட்ட செயலாளா் வில்சன் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் சிவமணி, இணைச் செயலாளா்கள் தீனா, முத்துக்குமாா், ஒன்றிய செயலாளா் தேன் பாண்டி, நகர செயலாளா் பாரதி மூா்த்தியாா் பேரவை மாவட்ட செயலாளா் வெங்கட், ஏபிஎல்எப் மாவட்டச் செயலாளா் ரகுராஜ், ஒன்றிய பொருளாளா் தங்கராஜ், செய்தி தொடா்பாளா் புருஷோத்தமன் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளா்களாக கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக செயலாளா் கோபால்நாயுடு, கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு முன்னாள் தலைவா் கே.எம்.எஸ்.சிவகுமாா் , அதிமுக நகர செயலாளா் எஸ்.டி.டி.ரவி, நிா்வாகிகள் கோவிந்தராஜன், பி.டி.சி.ராஜேந்திரன், வெற்றி ரவி,பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளா் விஜயகுமாா் பங்கேற்றனா்.
புரட்சி பாரதம் கட்சியினா் மற்றும் அதிமுக நிா்வாகிகள் பூவை மூா்த்தி படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். இதனைத் தொடா்ந்து கும்மிடிப்பூண்டி பஜாரில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.