தந்தை வெட்டிக் கொலை: மகன் கைது

தந்தை வெட்டிக் கொலை: மகன் கைது

Published on

கனகம்மாசத்திரம் அருகே தந்தையை வெட்டிக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தணி அடுத்த கனகம்மாச்சத்திரம் அருகே உள்ள பனப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் அருள்தாஸ். மரம் வெட்டும் கூலித் தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி. இவா்களது மகன் ஜஸ்டின் என்கிற தமிழரசு. கட்டட கூலித் தொழில் செய்து வருகிறாா். ஜஸ்டினுக்கு திருமணமான நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஜஸ்டின் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊா் சுற்றி வந்தாராம். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், வியாழக்கிழமை வேலைக்கு போகக் கூறி ஜஸ்டினை அருள்தாஸ் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ஜஸ்டின் மது போதையில் அருகில் இருந்த மரம் வெட்டும் கத்தியை எடுத்துவந்து அருள்தாஸின் தலையில் வெட்டினாராம். இதில் அருள்தாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருத்தணி ஏஎஸ்பி சுபம் திமன் மற்றும் கனகம்மாசத்திரம் போலீஸாா் அருள்தாஸின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com