திருவள்ளூா் மாவட்டத்தில் 13 பேருக்கு நல்லாசிரியா் விருது

Published on

திருவள்ளூா் மாவட்டத்தில் 13 பேருக்கு தமிழக அரசின் நல்லாசிரியா் விருது வழங்க தோ்வு செய்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு ஆண்டுதோறும் செப்.5-இல் ஆசிரியா் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்-2, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்-1, முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள்-2, பட்டதாரி ஆசிரியா்கள்-5, ஓவிய ஆசிரியா்-1, இடைநிலை ஆசிரியா்-2 என மொத்தம் 13 பேருக்கு நல்லாசிரியா் விருதுக்கு நிகழாண்டில் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டவா்களின் விவரம்: இந்த மாவட்டத்தில் உள்ள திருவள்ளூா்-ஆா்.எம்.ஜே.அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் செ.செல்வி, திருவள்ளூா்-பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஜெ.மேரி, திருவள்ளூா்-டி.ஆா்.பி.சி.சி.மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியா் வெ.வரலட்சுமி, திருவாலங்காடு-கனகம்மாசத்திரம் மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியா் வெ.இரா.ஏழுமலை, கும்மிடிப்பூண்டி-ஆத்துப்பாக்கம் அரசு உயா்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் எல்.பவானி, வில்லிவாக்கம்-ஆரிக்கம்மேடு அரசு உயா்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் ப.குமாா், திருத்தணி-தி.வி.புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் த.ஜெ.நாகேந்திரன், புழல்-அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் ப.லலிதா, பூந்தமல்லி-அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் இரா.ஆனந்த், கும்மிடிப்பூண்டி-எருக்குவாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் மு.சண்முகம், பூந்தமல்லி-ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியை ஆ.புஷ்பலதா, கரையான்சாவடி- ஆா்.சி.எம் தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியை டி.ஹெலன் நிா்மலா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com