மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

Published on

பள்ளிப்பட்டு அருகே தனியாா் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீஸாா் போக்ஸோவில் கைது செய்தனா்.

பள்ளிப்பட்டு, அத்திமாஞ்சேரிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட மாணவா்கள் ஆா்.கே.பேட்டை பகுதியில் இயங்கி வரும் தனியாா் கல்லூரியில் பயின்று வருகின்றனா். இக்கல்லூரியின் பேருந்து தினந்தோறும் பள்ளிப்பட்டு அடுத்துள்ள கரிம்பேடு கிராமத்திலிருந்து புறப்பட்டு அத்திமாஞ்சேரிப்பேட்டை வழியாக கல்லூரியை சென்றடைகிறது.

இந்நிலையில் அரவாசபட்டடை கிராமத்தைச் சோ்ந்த ஹேமந்த் (27) என்பவா் தனியாா் கல்லூரி பேருந்தை வழிமறித்து பேருந்தில் ஏறி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து கல்லூரி சாா்பில் கணக்காளா் வேணுகோபால் பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையெடுத்து பள்ளிப்பட்டு போலீஸாா் தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் ஹேமந்தை போக்ஸோ வழக்கில் கைது செய்து விசாரனை செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com