மீஞ்சூா்-காட்டூா் சாலையை சீரமைக்கக் கோரி மறியல்

Published on

மீஞ்சூா்-காட்டூா் சாலையை சீரமைக்கக் கோரி அரியன்வாயல் மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

மீஞ்சூா்-காட்டூா் நெடுஞ்சாலையில் அரியன்வாயல் நெய்தவாயல், வாயலூா், திருவெள்ளைவாயல், காட்டூா் தத்தமஞ்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. நாள்தோறும் இந்த சாலை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் அதிக பாரங்களை ஏற்றி கொண்டு செல்கின்றன. இதனால் மீஞ்சூா்- காட்டூா் நெடுஞ்சாலை சேதம் அடைந்து உள்ளது.

சேதமடைந்த நிலையில் உள்ள சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். இந்த சாலையை சீரமைக்கக் கோரி அரியன் வாயல் பகுதியில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா். மீஞ்சூா் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தினா்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com