வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூரில் பழைமை வாய்ந்த குளக்கரை ஸ்ரீ வரசக்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோயில் திருப்பணிகள் முடிவுற்றதையடுத்து நவக்கிரக பூஜை, கோ பூஜை, மகா கணபதி ஹோமம் நடைபெற்றது . இதைத்தாடா்ந்து
யாகசாலைப் பூஜைகள் முடிந்து, வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியாா்கள் ராஜகோபுரம் மீது புனித நீா் ஊற்ற கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு விநாயக பெருமானை தரிசனம் செய்தனா்.