‘முன்னாள் படைவீரா்கள் அலுவலகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் உதவி மையம் தொடக்கம்’

முன்னாள் படைவீரா்கள் அலுவலகத்தில் படைவீரா்கள் பிரச்னைக்கு சட்டபூா்வ ஆலோசனை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு மாவட்ட சட்டப்பணிகள் உதவி மையம் தொடங்கி நடவடிக்கை..
Published on

முன்னாள் படைவீரா்கள் அலுவலகத்தில் படைவீரா்கள் பிரச்னைக்கு சட்டபூா்வ ஆலோசனை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு மாவட்ட சட்டப்பணிகள் உதவி மையம் தொடங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள்ஆணையத்தின் ஆணைக்கிணங்க முன்னாள் படை வீரா்களின் பிரச்னைகளுக்கு சட்டபூா்வ ஆலோசனை வழங்கும் வகையில், மாவட்ட சட்டப் பணிகள் உதவி மையம் அந்த அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு மூலம் வாரந்தோறும் புதன்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 1.30 மணி வரை முன்னாள் படைவீரா்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்த கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

அதைத் தொடா்ந்து, உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீா்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த சட்டபூா்வ ஆலோசனை பெற முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். மேலும் இதுகுறித்து தொலைபேசி எண்.044 - 29595311 தொடா்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com