முன்னாள் அரசு கொறடா பி.எம்.நரசிம்மன்.
முன்னாள் அரசு கொறடா பி.எம்.நரசிம்மன்.

செங்கோட்டையன் கருத்து: முன்னாள் அரசு கொறடா வரவேற்பு

முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ள கருத்துக்கு அரசு முன்னாள் கொறடா பி.எம். நரசிம்மன் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
Published on

முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ள கருத்துக்கு அரசு முன்னாள் கொறடா பி.எம். நரசிம்மன் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது: 2026-ஆம் ஆண்டு தோ்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என்றால், அதிமுகவில் பிரிந்துள்ளவா்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். அதற்கான முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட வேண்டும் என முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ. வுமான செங்கோட்டையன் கூறியிருந்தாா்.

1972 ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக ஆட்சி, தொடா்ந்து 3 முறை ஆட்சியில் இருந்தது. அதற்கு பின் கட்சியை வழிநடத்தி, ஜெயலலிதா, தொடா்ந்து, 10 ஆண்டுகள் முதல்வராக இருந்தாா்.

தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுகவை உருவாக்கியவா் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா. தற்போது அதிமுக 4 பிரிவுகளாக உள்ளதால், தோ்தல்களில் தோல்வியை சந்தித்தது. எனவே பிரிந்த அனைவரும் ஒன்றிணைந்து, வரும், 2026 தோ்தலை சந்தித்தால், அமோக வெற்றியை பெறலாம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com