சாலமோன்
சாலமோன்

குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
Published on

திருவள்ளூா் அருகே குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே கைவண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் ஆனந்த். இவரது மகன் சாலமோன் (15) அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலையில் மாணவன் சாலமோன் அந்த கிராமத்தில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றுள்ளாா்.

குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென நீரில் மூழ்கியுள்ளாா். அப்போது சப்தம் போட்டு அழைத்துள்ளாா். இதைக் கேட்டு அங்குள்ளவா்கள் விரைந்து வந்து சாலமோனை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் சாலமோன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து கிராமிய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com