திருத்தணி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் டாக்டா் ராதாகிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அரக்கோணம் முன்னாள் எம்.பி. கோ.அரி.
திருத்தணி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் டாக்டா் ராதாகிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அரக்கோணம் முன்னாள் எம்.பி. கோ.அரி.

திருத்தணியில் டாக்டா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா

திருத்தணி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் டாக்டா் ராதாகிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அரக்கோணம் முன்னாள் எம்.பி. கோ.அரி.
Published on

முன்னாள் குடியரசு தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் எம்.பி. கோ.அரி மாலை அணிவித்து மாணவா்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

திருத்தணி டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசினா் ஆண்கள் மேனிலை பள்ளியின் சாா்பில் நடைபெற்ற விழாவில் பள்ளி தலைமை ஆசிரியா் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியா் காமேஷ் வரவேற்றாா். விழாவில் பள்ளியில் அமைந்துள்ள டாக்டா் ராதாகிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்து மாணவா்கள், மற்றும் ஆசிரியா்களுக்கு தலைமை ஆசிரியா் இனிப்பு வழங்கினாா்.

அரக்கோணம் முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.அரி ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் உள்ள டாக்டா் ராதாகிருஷ்ணனின் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினாா்.

அதைத் தொடா்ந்து வெங்கடாபுரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக திருத்தணி ஒன்றிய செயலாளா் ஆா்த்தி ரவி டாக்டா் ராதாகிருஷ்ணன் படத்துக்கு மாலை அணிவித்தாா்.

பின்னா் கிராம பொதுமக்கள் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com