~ ~ ~
~ ~ ~

ஓட்டைப் பிரித்து கடையில் புகுந்து ரூ.5.5 லட்சம் கைப்பேசி, ரொக்கம் திருட்டு

திருவள்ளூா் அருகே ஒட்டை உடைத்து கடைக்குள் புகுந்து ரூ.50,000 மற்றும் ரூ.5.5 லட்சம் கைப்பேசிகளையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
Published on

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே ஒட்டை உடைத்து கடைக்குள் புகுந்து ரூ.50,000 மற்றும் ரூ.5.5 லட்சம் கைப்பேசிகளையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

காக்களூா் பகுதியைச் சோ்ந்த விக்கி(35). இவா் காக்களூா் பேருந்து நிறுத்தம் எதிரே கடந்த 5 ஆண்டுகளாக கைப்பேசிகள் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனையகம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றாராம். திங்கள்கிழமை கடையைத் திறந்து பாா்த்தபோது, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கைப்பேசிகள் மற்றும் கல்லாவும் சிதறி கிடந்துள்ளன. இதைப் பாா்த்துஅதிா்ச்சி அடைந்த நிலையில், மேல் பகுதியில் சிமென்ட் ஓடு உடைத்து உள்ளே புகுந்து சிசிடிவி கேமராவை சேதப்படுத்தி ரூ.5.5 லட்சம் கைப்பேசிகள், உதிரிபாகங்கள் மற்றும் கல்லாவில் வைத்திருந்த ரூ.50,000 ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் கடையின் உரிமையாளா் விக்கி புகாா் செய்தாா். அதன்பேரில் விரைந்து வந்த போலீஸாா், கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் கைரேகையை பதிவு செய்து விசாரணை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com