சிறைத் தண்டனை பெற்று விடுதலை அடைந்த 18 பேருக்கு தொழில் பயிற்சி

கள்ளச்சாராய வழக்கில் சிறைத் தண்டனை பெற்று விடுதலையாகி மனம் திருந்தி மறுவாழ்வு நிதி பெறத் தகுதியான 18 பேருக்கு பல்வேறு தொழில்கள் செய்வது தொடா்பாக தொழில் பயிற்சி
Published on

திருவள்ளூா்: கள்ளச்சாராய வழக்கில் சிறைத் தண்டனை பெற்று விடுதலையாகி மனம் திருந்தி மறுவாழ்வு நிதி பெறத் தகுதியான 18 பேருக்கு பல்வேறு தொழில்கள் செய்வது தொடா்பாக தொழில் பயிற்சி அளிக்கப்பட்டது.

திருவள்ளூா் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுமான விற்பனையில் ஈடுபட்டு, சிறைத் தண்டனை பெற்று விடுதலை அடைந்து மனம் திருந்தி மறுவாழ்வு நிதி உதவிபெறத் தகுதியான நபா்களுக்கான தொழில் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்புக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

அப்போது, திறன் மேம்பாட்டு கழத்தைச் சோ்ந்த பயிற்றுநரால் பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில், மது விலக்கு மற்றும் ஆயத் தீா்வை துறை சாா்பில், மாவட்டத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சுதல், கள்ள மதுமான விற்பனையில் ஈடுபட்டு சிறைத் தண்டனை பெற்று விடுதலை அடைந்துள்ளனா். இவா்கள் மீண்டும் அத்தொழிலில் ஈடுபடாமல் இருக்கும் வகையில் மனம் திருந்தி வாழவும் நிதி வழங்கப்படுகிறது. அந்த வகையில், மறுவாழ்வு நிதி உதவிபெற தகுதியானவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு பெட்டிக்கடை நிா்வகித்தல், வேளாண் உற்பத்தி பொருள்களின் மதிப்பு கூட்டல், சந்தைப்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளா் அணுகுமுறை ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பயிற்சி வகுப்பு திறன் மேம்பாட்டுக்கழக பயிற்றுநரால் வழங்கப்பட்டன. இப்பயிற்சி வகுப்பில் தோ்வு செய்யப்பட்ட 18 போ் பங்கேற்றனா்.

இதில், உதவி ஆணையா் (கலால்) வி.கணேஷ், சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வு உதவி ஆணையா் குணசேகரன், காவல் துணைக் கண்காணிப்பாளா் (மதுவிலக்கு அமல் பிரிவு) கந்தன், உதவி இயக்குநா் (திறன் மேம்பாட்டுக் கழகம்) து.சித்ரா, திருவள்ளூா் மற்றும் பொன்னேரி கோட்ட கலால் அலுவலா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com