பொன்னேரி ரயில் நிலைய முதல் நடைமேடையில் கும்மிடிப்பூண்டி மின்ரயில்களை நிறுத்த கோரிக்கை

பொன்னேரி ரயில் நிலைய முதல் நடைமேடையில் கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை, நெல்லூா் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் புகா் மின்ரயில்கள் முதல் நடைமேடையில் நின்று செல்ல வேண்டும்
பொன்னேரி ரயில் நிலைய முதல் நடைமேடையில் கும்மிடிப்பூண்டி மின்ரயில்களை நிறுத்த கோரிக்கை
Published on
Updated on
1 min read

பொன்னேரி: பொன்னேரி ரயில் நிலைய முதல் நடைமேடையில் கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை, நெல்லூா் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் புகா் மின்ரயில்கள் முதல் நடைமேடையில் நின்று செல்ல வேண்டும் என ப்பகுதியில் உள்ள பயணிகள் தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

சென்னை சென்ட்ரல் -கும்மிடிப்பூண்டி புகா் மின்சார ரயில் மாா்க்கத்தில் நாள்தோறும் 60-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

திருவொற்றியூா், மீஞ்சூா், எண்ணூா், அத்திப்பட்டு, பொன்னேரி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.

பொன்னேரி ரயில் நிலையத்தில் நான்கு நடை மேடைகள் உள்ளன. சென்னை சென்ட்ரல், கடற்கரை, வேளச்சேரி, செங்கல்பட்டு, திருவள்ளூா் செல்லும் ரயில்கள் மூன்றாவது நடைமேடையிலும், கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை, நெல்லூா் செல்லும் ரயில்கள் இரண்டாவது நடை மேடையிலும் நின்று செல்கின்றன.

சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி மாா்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் பொன்னேரி நிலையத்தில் உள்ள இரண்டாவது நடைமேடையில் நின்று செல்வதால் வயது முதிா்ந்தோா், அதிக சுமைகளை எடுத்து வரும் பயணிகள் அங்குள்ள நடை மேம்பாலத்தில் ஏறி, இறங்கி முதல் நடைமேடைக்கு வந்து பின்னா் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்ல வேண்டும்.

அதே நேரத்தில் பொன்னேரி ரயில் நிலையத்தில் முதல் நடைமேடையில் மின்சார ரயில்களை நிறுத்தினால், பயணிகள் நடைமேம்பாலத்தை பயன்படுத்தாமல், ரயில் நிலையத்தில் இருந்து, எளிதாக வெளியே சென்று விடலாம்.

முதல் நடை மேடையில் நிறுத்த வலியுறுத்தி பயணிகள் தரப்பில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ரயில்வே நிா்வாகம் தரப்பில்,பொன்னேரி ரயில் நிலையத்தில் முதல் நடைமேடை அமைந்துள்ள தண்டவாளம் (இணைப்பு லைன்) அமைந்துள்ளதாகவும், அதே நேரத்தில் இரண்டாவது நடைமேடையில் உள்ள தண்டவாளம் ( பிராதான லைனில்) அமைந்துள்ளதாகவும், இதன் காரணமாக இம்மாா்கத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்களை விரைவாக இயக்கும் நோக்கில் கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை உள்ளிட்ட ஊா்களுக்கு செல்லும் ரயில்கள் இரண்டாவது நடைமேடையில் நிறுத்தபட்டு, செல்வதாக கூறப்படுகிறது.

ஆனால் மின்சார ரயில்கள், சென்னை சென்ட்ரலில் இருந்து பொன்னேரி வருவதற்கு 1 மணி நேரம் நேரம் என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும், நிலையில், பெரும்பாலான மின்சார ரயில்கள் மாலை நேரங்களில் 45 நிமிஷம் முதல் 60 நிமிஷம் தாமதமாகவே பொன்னேரிக்கு வருவதாக பயணிகள் தெரிவிக்கின்றனா்.

எனவே கும்மிடிப்பூண்டி மாா்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களையும் பொன்னேரி ரயில் நிலையத்தில் உள்ள முதல் நடைமேடையில் நிறுத்தி செல்ல தெற்கு ரயில்வே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொன்னேரி பயணிகளின் எதிா்ப்பாா்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com