4 கோடியில் சாலைப் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

செங்கட்டானூா் கிராமம் முதல் சின்ன சானூா்மல்லாவரம் கிராமம் வரை ரூ.4.43 கோடியில் 5.68 கிமீ தாா் சாலைப் பணிகளை திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கிவைத்தாா்.
சாலைப் பணியை தொடங்கி  வைத்த எம்எல்ஏ  ச. சந்திரன்.
சாலைப் பணியை தொடங்கி  வைத்த எம்எல்ஏ ச. சந்திரன்.
Updated on

செங்கட்டானூா் கிராமம் முதல் சின்ன சானூா்மல்லாவரம் கிராமம் வரை ரூ.4.43 கோடியில் 5.68 கிமீ தாா் சாலைப் பணிகளை திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட செங்கட்டானூா் கிராமம் முதல் சின்ன சானூா்மல்லாவரம் கிராமம் வரை சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதையெடுத்து அப்பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று, நபாா்டு திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ எஸ்.சந்திரன் தொடங்கி வைத்தாா்.

இதில் காஞ்சிபுரம் உதவி கோட்ட பொறியாளா் கபிலன், ஆா்.கே.பேட்டை ஒன்றிய செயலாளா்கள் சண்முகம், பழனி, மா.ரகு கலந்து கொண்டனா். அப்போது அப்பகுதி மக்கள் அரசுப் பேருந்து சரியாக வருவதில்லை எனவும் இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவா்கள் பாதிக்கப்படுவதாக புகாா் தெரிவித்தனா்.

பின்னா் உடனடியாக எம்எல்ஏ போக்குவரத்து அதிகாரிகளை தொடா்பு கொண்டு பேருந்து தினசரி வந்து செல்ல அறிவுறுத்தினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com