மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைெற்ற மின்நுகா்வோா் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு குறைகளை குறிப்பிட்டு மனுக்களை விவசாயிகள் வழங்கினா்.
Published on

மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைெற்ற மின்நுகா்வோா் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு குறைகளை குறிப்பிட்டு மனுக்களை விவசாயிகள் வழங்கினா்.

அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் இயங்கி வரும் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவள்ளூா் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் சேகா் தலைமை வகித்தாா். திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளா் பொறுப்பு முருகபூபதி வரவேற்றாா்.

கூட்டத்தில், வி.புதுாா் கிராம விவசாயிகள், மின்மாற்றி பழுதாகி ஒரு மாதம் ஆகியும் சீரமைக்கவில்லை, அகூா் கிராமத்தினா், எங்கள் பகுதியில் உள்ள 5 கோயில்களின் மின்இணைப்பு பெயா், இந்து சமய அறநிலையத் துறையின் பெயரில் மாற்றித் தரவேண்டும், அத்திமாஞ்சேரி மற்றும் திருத்தணி பகுதி விவசாயிகள், விவசாய கிணறுகளுக்கு விரைந்து மின்சாரம் வழங்க வேண்டும் என, மனுக்களை கொடுத்தனா்.

மனுவின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்பாா்வைப் பொறியாளா் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com